சினிமாவாகும் என்.டி.ஆர். - லட்சுமி சிவபார்வதி உறவு!
சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம் கோபால் வர்மா, மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ஆர். - லட்சுமி சிவபார்வதி இடையிலான உறவை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இதற்கான அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் என்.டி.ஆரின் வாழ்க்கையில் உண்மையில் நடந்தது என்ன? என்பதை பிரதிபலிப்பதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திராவில் அரசியலிலும், சினிமாவிலும் புரட்சிகள் செய்த என்.டி.ராமராவ், தனது 70 வது வயதில் லட்சுமி சிவபார்வதி (வயது 38) என்ற கல்லூரி பேராசிரியையை மறுமணம் செய்து கொண்டவர்..