2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதலாம் நாளான நேற்று இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய நிலையில், இரண்டாம் நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில், நாடுமுழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவைப்பணிகளுக்கு பற்றாக்குறை இருப்பதால் அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து தனியார் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளன என தெரிவித்துள்ளார். இதன்மூலம் நாடு முழுவதும் மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 112 மாவட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும். புதிய கல்வி கொள்கை விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் புதிய பொறியியல் பட்டதாரிகள் ஓராண்டு பயிற்சி பெறும் வகையில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
தேசிய தடயவியல் மற்றும் சைபர் அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். போன்ற திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.