Published on 15/09/2018 | Edited on 15/09/2018
பிரதமர் மோடி தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு மஹாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை இவரின் கீழ் இருக்கும் மத்திய அரசு தொடங்கிவைத்தது.இத்திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மொபைலுக்கு என்று தனி செயலிகளிலும் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதி(இன்று) தூய்மையே உண்மையான சேவை என்று புதிய திட்டத்தை தொடங்கியுள்ளர். இதை பற்றி பேசிய மோடி, ”தூய்மையான இந்தியா, நோயை விரட்டும்.சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வதை அனைவரும் அன்றாட வழக்கமாக்க வேண்டும்.மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடுமுழுவதும் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்படும்” என கூறியுள்ளார்.