Skip to main content

மோடி சிலை திறக்கும் நாளில் வீட்டில் உணவு சமைக்கமாட்டோம்;பழங்குடியினர் போர்க்கொடி!

Published on 21/10/2018 | Edited on 21/10/2018

 

bjp

 

குஜராத் நர்மதை ஆற்றின் அணைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை மோடி திறந்துவைக்கும் நாளில் வீட்டில் உணவு சமைக்கமாட்டோம் என பழங்குடியின மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

 

குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றின் அணைப்பகுதியில் 589 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி வரும் அக்டோபர் 31-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளார்.  இந்நிலையில் அந்த நதிக்கரையில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நில வசதிகள் செய்து தருவதாக அரசால் கூறப்பட்டு இதுவரை நிறைவேற்ற படவில்லை எனவே மோடி சிலையை திறந்தால் அந்த நாளை நாங்கள் துக்கத்தினமாக கடைபிடித்து அன்று வீட்டில் உணவு சமைக்கமாட்டோம் என அப்பகுதியில் உள்ள 72 ஊர்களில் வசித்து வரும் பழங்குடியினர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்