இந்தியாவில் சிறுத்தை இனம் 1952 ஆம் ஆண்டு முற்றிலும் அழிந்து விட்டதாக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியா கொண்டு வர திட்டங்கள் வகுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனடிப்படையில் ஐந்து பெண் சிறுத்தைகள், மூன்று ஆண் சிறுத்தைகள் என மொத்தம் எட்டு ஆப்பிரிக்கச் சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த எட்டு சிறுத்தைகளையும் பாதுகாக்க அரசு முடிவு எடுத்துள்ளது.
கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளின் உடலில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாட்டு சிறுத்தைகள் பிற நாட்டிற்கு வழங்கப்படுவது உலகிலேயே இது முதல் முறை என்றும் கூறப்படுகிறது. ஆப்ரிக்காவின் நமீபியாவிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு இடைநிலா சரக்கு விமானத்தின் மூலம் 8 சிறுத்தைகளும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் பிறகு மத்தியப்பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவிற்கு இந்த சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டன. இந்த பிறந்தநாள் என்ற நிலையில் இந்த எட்டு சிறுத்தைகளின் மூன்று சிறுத்தைகளை குணோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி இன்று விடுவித்தார். மீதமுள்ள 5 சிறுத்தைகள் மற்ற வனங்களில் விரைவில் விடப்பட்டுள்ளது.