Published on 23/02/2021 | Edited on 23/02/2021
இந்தியாவில் மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கவும், பட்ட மேற்படிப்பு படிக்கவும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்தாண்டிற்கான மருத்துவ மேற்படிப்பிற்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தேசிய தேர்வுகள் ஆணையம், தேர்வு கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3,750 ரூபாயாக இருந்த, மருத்துவ மேற்படிப்பிற்கான நீட் கட்டணம் 5,015 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கட்டணத்தில் 765 ரூபாய் ஜி.எஸ்.டியும் அடங்கும். அதேபோல் பட்டியலின பிரிவினருக்கான பட்டமேற்படிப்பு நீட் கட்டணம், 2,750 ரூபாயிலிருந்து 3,835 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கட்டணத்தில் 585 ரூபாய் ஜி.எஸ்.டி அடங்கும்.