பழங்குடியின நபர் ஒருவரின் கையை கட்டி காரில் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் மதன்(49). பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவரை நேற்றய முன்தினம்( 15.12. 24) அடையாளம் தெரியாத நபர்கள் காரில் கையை கட்டி சுமார் அரை கிலோமீட்டர் வரை இழித்து சென்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
கேரளாவுக்கு சுற்றுலா வந்த ஒரு பயணியர் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட மதன், அவர்களை சமாதானப்படுத்தி தடுக்க முயன்றார். இதில் கோபமடைந்த ஒரு தரப்பினர் காரில் உள்ளே இருந்துகொண்டு, வெளியே மதன் கையை பிடித்து அவரை தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். சுமார் அரை கிலோமீட்டர் வரை அவரை இழுத்துச் சென்று கீழே தள்ளியுள்ளனர். இதில் அவர் காயமடைந்தார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த கார் முகமது ரியாஸ் என்பவரின் பேரில் பதிவு செய்யப்பட்டிருப்பது என்பது தெரியவந்தது. பழங்குடியின நபரை காரில் இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.