Published on 18/02/2021 | Edited on 19/02/2021

மேற்கு வங்கத்தில் மாநிலத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மீது குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஜாகிர் உசேன். முர்ஷிதாபாத் அருகே நிமிதா ரயில் நிலையத்தில் நடந்து சென்ற அமைச்சர் ஜாகீர் உசேன் மீது குண்டு வீசப்பட்டுள்ளது. குண்டு வீச்சில் படுகாயமடைந்த அமைச்சருக்கு முர்ஷிதாபாத் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த அமைச்சர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டுவீச்சில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் குண்டு வீசப்பட்ட முர்ஷிதாபாத் நிமிதா ரயில் நிலையத்தில் தற்போது போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.