முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டுவரும் இஸட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப்பெறப் போவதாக தி ஹிண்டு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஆனால், செய்தி வெளியான ஒரே நாளில் மன்மோகன் சிங்கிற்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு தொடரும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.
மன்மோகன் சிங்கிற்கு 24 மணிநேரமும் பாதுகாப்பளிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் அவருடைய பாதுகாப்புப் பணியை கவனிக்கும். 35 கமாண்டோக்கள் அவருக்காக 24 மணிநேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். மன்மோகன் சிங் பாதுகாப்பு தொடர்பாக வழக்கமான ஆய்வுகள்தான் நடத்தப்பட்டது. மற்றபடி அவருக்கான பாதுகாப்பு தொடரும் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.
1985 ஆம் ஆண்டு இந்திரா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர்களுக்கு பாதுகாப்பளிக்க இந்த பாதுகாப்புப்படை உருவாக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோருக்காக மட்டும் 3 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பணியில் உள்ளனர்.