கேரள துப்புரவு பணியாளரின் சுற்றி வளைத்த மலைப்பாம்பை, மற்ற தொழிலாளர்களால் அகற்றப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சில தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். பூரணச்சந்திரன் என்ற தொழிலாளியின் அலறல் சத்தத்தை கேட்டு, மற்ற தொழிலாளர்கள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பூரணச்சந்திரனின் கழுத்தில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று சுற்றி வளைத்து அவரை விழுங்க முயன்றுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற தொழிலாளர்கள், அவர் கழுத்தில் இருந்த மலைப்பாம்பை அப்புறப்படுத்தினார்கள். பின்பு தகவலறிந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH Kerala: pic.twitter.com/uqWm4B6VOT
— ANI (@ANI) October 16, 2019