சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியானது. அதில் ஒருவர் தனது சொந்த சட்டையால் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு, குச்சிகளாலும், பெல்ட்டாலும் சரமாரியாக அடிக்கும் காட்சிதான் அது. இந்த வீடியோ வெளியாகி பலரிடத்திலும் கண்டனத்தை எழுப்பிய நிலையில், காவல்துறை இதுகுறித்து விசாரணை நடத்தியது.

இந்த வீடியோ எடுக்கப்பட்டது உத்தரப்பிரதேசம் மாநிலம் டியோரியா பகுதியில் என்பதில் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அடிவாங்கிய நபரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டதற்காகத் தான் அவர்கள் தன்னை அடித்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கியக்குற்றவாளியை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் நால்வரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.