Published on 05/02/2019 | Edited on 05/02/2019
சாரதா சிட்பண்ட் மற்றும் ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் மேற்குவங்க காவல் துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்ட சிபிஐ அதிகாரிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிபிஐ செயல்பாடுகளை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானெர்ஜி 3 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது தர்ணாவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு அவரது தர்ணாவை சுமூகமாக முடித்து வைத்துள்ளார்.