குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் உள்ள மக்கள் இதுகுறித்து பயப்பட வேண்டாம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "மேற்குவங்க மக்கள் யாரும் எந்தவிதமான இடையூறு ஏற்படுத்தும் செயல்களிலோ, எந்தவிதமான வன்முறையிலுமோ ஈடுபட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றை நாம் அமல்படுத்தபோவதில்லை என்பது உறுதி. எனவே தயவுசெய்து சாலைகளைத் தடுக்க வேண்டாம். அதுபோல சட்டத்தையும் கையில் எடுக்க வேண்டாம்" என கூறியுள்ளார்.