Skip to main content

'சாலையில் இறங்கிய மம்தா... காவலருக்கு கொட்டு' எதற்காக தெரியுமா..?

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மாநில முதல் அமைச்சர்கள் முதலிய விவிஐபி கான்வாய்கள் வரும்போது போக்குவரத்து நிறுத்தப்படுவது வழக்கமான ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. விவிஐபி கான்வாய்கள் சிரமம் இன்றி எளிதாக கடந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த நடைமுறை அனைத்து மாநிலங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பாணியில் அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற மம்தா பானர்ஜி, கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில், ஏர்போர்ட்டில் இருந்து தலைமைச்செயலகம் சென்றுள்ளார்.
 

j



இதன்படி காவல்துறையினர், வழக்கமாக பின்பற்றப்படும் புரோட்டோகால் படி, முதல்வரின் கான்வாய் வரும்போது போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள். மேற்கு வங்க மாநிலம் முழுவதும் இந்தமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதர வாகன ஓட்டிகளுக்கு கடுமையான சிரமங்கள் ஏற்படும் என்பதால், இதுபோன்ற நடவடிக்கையை மம்தா பானர்ஜி பலமுறை எதிர்த்துள்ளார். இந்நிலையில், காவல்துறையினர் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர் என்பதை அறிந்த அவர், தன்னுடைய வாகனத்தில் இருந்து கீழே இறங்கி போக்குவரத்து காவலர்களை திட்டியுள்ளார். மேலும் உடனடியாக போக்குவரத்தை சரிசெய்யவும் உத்தரவிட்டு, சாலையோரத்தில் சுமார் 10 நிமிடங்கள் காத்திருந்தார். போக்குவரத்து சரியான பிறகே அவர் தலைமைச் செயலகம் புறப்பட்டு சென்றார்.

 

சார்ந்த செய்திகள்