Published on 13/06/2020 | Edited on 13/06/2020

இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. தற்போது பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் ஹர்ஷவர்த்தன், ஐ சி எம் ஆர் இயக்குனர் பல்ராம், மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் உடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கரோனா பரிசோதனை, நோயாளிகளுக்கான படுக்கைகள், மருத்துவ சேவைகளை அதிகரிப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. கரோனா அவசர காலத் திட்டங்களை மேற்கொள்ள சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். அதேபோல் மத்திய சுகாதாரத்துறை மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார்.