Published on 25/03/2018 | Edited on 25/03/2018
கேரளாவில் அடித்துக்கொல்லப்பட்ட மதுவின் தங்கை காவல்துறை தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அத்தப்பாடி மலைக்கிராமத்தில் மது என்ற இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட அதே நாளில், அவரது தங்கை சந்திரிகா காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துகொண்டார். தனது அண்ணன் கொல்லப்பட்ட தகவல் அறிந்திருந்தாலும், துக்கத்தை மனதில் வைத்துக்கொண்டே அவர் தேர்வை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், தற்பொழுது அந்தத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் சந்திரிகா தேர்ச்சிபெற்றுள்ளார். இதன்மூலம் அவருக்கு முதல்நிலை காவல்துறை பணியாளர் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தனது அண்ணனைப் பிரிந்து வாடும் தனது குடும்பத்தினருக்கு இந்த வெற்றி நல்ல ஆறுதலாகவும், அதேசமயம் வறுமைச் சூழலில் உதவிகரமாகவும் இருக்கும் என சந்திரிகா தெரிவித்துள்ளார்.