தலைமறைவாக உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் அலுவலகங்கள், தலைவர்களின் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது. இதில் கேரளாவில் நடந்த சோதனையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள், கலவரமாக மாறி, அம்மாநில அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை,வழக்குப்பதிவு செய்தது.
அந்த அமைப்பைச் சேர்ந்த அப்துல் சதார், சீரூப் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புகள் இருப்பதால், தேசிய புலனாய்வு முகமை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
முன்னதாக, வன்முறையின் போது சேதமடைந்த 71 பேருந்துகளின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.