தண்ணீருடன் மதுபானம் கலந்து வந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ். இவர் அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் தரைதளத்தில் வசித்து வருவதால் தண்ணீர் தீர்ந்துவிட்டால் அவரே போர்வேல் குழாயை ஆன் செய்வார். தற்போது போர்வெல் குழாய் வேலை செய்யாத காரணத்தால் அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே இருக்கும் கிணற்றில் இருந்து மோட்டார் வழியாக சில தினங்களாக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை இதே போன்று மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு கொண்டிருக்கும் போது குழாயில் வரும் தண்ணீரில் வாடை அடித்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் அதனை முகர்ந்து பார்த்துள்ளனர். அப்போது தண்ணீருடன் மது கலந்திருப்பதை அவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். கிணற்றில் யாராவது மதுவை கலந்திருப்பார்களா அல்லது தண்ணீரின் தன்மை மாறியிருக்கிறதா என்று தெரியாமல் காவல்நிலையில் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் அப்பகுதி இளைகள் வேண்டுமென்றே மதுவை தண்ணீரில் கலந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.