Published on 20/02/2023 | Edited on 20/02/2023

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சரிந்து விழுந்தன.
ஜம்மு காஷ்மீரில் சோன்மார்க் நகரில் உள்ள ரம்பன் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 13 வீடுகள் சரிந்து விழுந்து சேதமடைந்தன. ஆறுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின. உடனடியாக பேரிடர் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்ற நிலையில் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.