ராஞ்சி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், இரவில் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியில் குறைகின்ற. நாய்களால் உறக்கம் கெடுகிறது என்று புகாரளித்துள்ளார். மேலும், பணம் செலுத்தி சிகிச்சை பெரும் மருத்துவ வார்டுக்கு தன்னை மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து லல்லுவின் நெருங்கிய நண்பரும் ஆர்ஜேடியின் எம்எல்ஏ வான போலா யாதவ் கூறுகையில்," மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் தெருநாய்களால் இரவில் லல்லுவிற்கு தூங்க முடியவில்லை, கழிவறை துர்நாற்றம் வீசுகிறது. அதனால், அவரை பணம் செலுத்தி மருத்துவம் பார்க்கும் வார்டுக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அந்த வார்டுக்கு உண்டான பணத்தை செலுத்திவிடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
1990 ஆண்டு பிஹாரில் லல்லுவின் ஆட்சி நடைபெற்றபோது கால்நடைகளுக்கு வாங்கிய தீவனங்களில் ரூ.900 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில் லல்லு குற்றவாளி என்று உறுதிப்படுத்தி சிறைத்தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.