Published on 30/08/2021 | Edited on 30/08/2021

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. குறிப்பாக தொடர்ந்து நான்கு நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது. இந்தநிலையில் நேற்று தினசரி கரோனா பாதிப்பு சற்று குறைந்தது.
நேற்று கேரளாவில் 29, 836 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தநிலையில் இன்று கேரளாவில் தினசரி கரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 19,622 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.