கேரள மாநில கோட்டயம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவியைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக்கொண்டு பணம் வாங்கி வரச் செய்துள்ளார். அவரும் அவ்வாறே செய்து வர ஒரு கட்டத்தில் அவர், கணவரின் விருப்பத்துக்கு மறுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்கள் முன்பு வேறு ஒருவரின் வீட்டிற்கு மனைவியை அழைத்து சென்ற அந்த இளைஞர், அங்கிருந்தவரிடம் பணம் வாங்கிக்கொண்டு மனைவியை விட்டுவிட்டு வெளியேறியுள்ளார். இதனால் கோபமான அவரது மனைவி நேராக அங்கிருந்து வெளியேறி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை அடுத்து அவரைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றது தெரியவந்துள்ளது.
போலீசார் விசாரணையில் அந்த இளைஞர் கூறியதாவது, " நாங்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குடும்ப விழா என்ற பெயரில் குரூப் தொடங்கி செயல்பட்டு வருகிறோம். இந்த குரூப்பில் தற்போது வரை 2000 ஆயிரம் நபர்கள் இருக்கிறோம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்தக் குரூப்பில் உள்ள நண்பர்கள் வீட்டிற்குச் சென்று குடும்ப விழா என்ற பெயரில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வோம். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பல நண்பர்களுக்கு அழைப்பு விடுப்போம். அவர்களும் நிறைய எண்ணிக்கையில் கலந்துகொள்வார்கள். அந்த விழாவில் மது, பிரியாணி என்று எங்கள் குரூப்பின் மூலம் செலவு செய்வோம். நாங்கள் கூட்டிச்செல்லும் எங்களது மனைவிகளை அங்கு வருபவர்களுடன் அனுப்பி பணம் பெற்றுக்கொள்வோம். இதன் மூலம் எங்களுக்கு வாரத்தில் பல ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும். ஹோட்டல்களில் நடைபெற்றால் போலீஸ் சொந்தரவு இருக்கும் என்பதால் எங்கள் குரூப்பில் உள்ளவர்களின் வீடுகளையே நாங்கள் தொடர்ந்து தேர்ந்தெடுப்போம்" என்றார்.
இந்த தகவலை கேட்ட அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரின் செல்போனை சோதனையிட்டதில் அவர் கூறிய அனைத்தும் உண்மை என்பதை உறுதி செய்தனர். ஜோடியை மாற்றிக்கொள்ளும் அந்த வாட்ஸ் குரூப்பில் 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் தங்களது மனைவியை மாற்றிக்கொள்ள தயாராக உள்ளனர். இந்தக் குரூப்பில் அரசு உயரதிகாரிகள், அரசியல் பிரபலங்களின் எண்கள் இருப்பதாக தாங்கள் சந்தேகம் அடைந்துள்ளோம். எனவே அது குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகிறோம். தற்போது புகாருக்குள்ளான 7 பேரை கைது செய்துள்ளோம் எனக் கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில எதிர்க்கட்சியினர் குரலெழுப்பியுள்ளனர்.