Skip to main content

ஏதோ என்னால முடிஞ்சது... வைரலாகும் இளநீர் தாத்தா!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020

கேரள மாநிலத்தில் தென்னை மரம் ஏறும் தொழிலாளி ஒருவர் காவல்துறையினருக்கு உதவி செய்துவரும் செய்தி தற்போது வைரலாகி வருகின்றது. இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் செயல்படவில்லை. மருத்துவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் முதலானவர்கள் எவ்வித ஓய்வுமின்றி தினமும் பணிக்கு வருகிறார்கள். தங்களின் அதிகபட்ச உழைப்பை இந்த ஊரடங்கு காலத்தில் கொடுத்து வருகிறார்கள். இதே போன்று முதியவர் ஒருவரும் தன்னால் முயன்ற உதவிகளை காவல்துறையினருக்கு செய்துவரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  kl



கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் 60 வயதான கிரீஷ். தென்னை மரம் ஏறி காய்களை பறித்துப்போடும் இவருக்கு ஒரு மரம் ஏறினால் 100 ரூபாய்க்கு கீழாகவே வருமானம் கிடைக்கும். இந்த ஊரடங்கு காலத்தில் பெரிய வருமானமின்றி இருந்தாலும், அவர் தற்போது செய்யும் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தினமும் கிடைக்கும் சொற்ப வருமானத்தை எடுத்துக்கொண்டு அந்த பகுதியில் பணியாற்றும் காவலர்களுக்கு தினமும் இளநீர், டீ, திண்பண்டங்கள் முதலியவற்றை வழங்கி வருகிறார். சில நாட்கள் அவருக்கே உணவு இல்லாமல் இருந்தாலும், கிடைக்கும் பணத்தில் காவலர்களுக்கு உணவுப்பொருட்களை வாங்கி கொடுத்து வருகிறார். "நமக்காக கஷ்டப்படும் அவர்களுக்கு ஏதோ நம்மால் ஆன சிறு உதவி" என்று கூறுகிறார் அந்த முதியவர். 

 

 

சார்ந்த செய்திகள்