Published on 24/12/2020 | Edited on 24/12/2020
பிரிட்டனில் உருமாறிய கரோனா பரவலைத் தடுக்க, மகாராஷ்ட்ரா மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அம்மாநில அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், கர்நாடகவில் இன்று முதல் ஜனவரி 2- ஆம் தேதி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், கர்நாடாக அரசு தற்போது இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா, வல்லுனர்களின் ஆலோசனைப்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இரவு நேர ஊரடங்கு தேவையில்லை என்பது பொதுமக்களின் கருத்தாக இருப்பதாலும், அமைச்சர்கள், அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு, தற்போது அது திரும்பப் பெறப்படுவதாகக் கூறியுள்ளார்.