Published on 03/06/2022 | Edited on 03/06/2022
ரயிலில் உடமைகளை எடுத்துச் செல்ல புதிய கட்டுப்பாடுகளை ரயில்வே நிர்வாகம் விதித்துள்ளது. குறிப்பிட்ட அளவைத்தாண்டி எடுத்துச் செல்லப்படும் உடமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. அதன்படி. ஏசி முதல் வகுப்பில் பயணிப்போர் 70 கிலோவும், ஏசி இரண்டாம் வகுப்பில் பயணிப்போர் 50 கிலோவும், ஏசி மூன்றாம் வகுப்பு மற்றும் சாதாரண படுக்கை வகுப்பில் பயணிப்போர் 40 கிலோவும், இரண்டாம் வகுப்பில் பயணிப்போர் 35 கிலோ அளவில் மட்டும் உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை அதிக உடைமைகள் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தால் பார்சல் அலுவலகத்தில் சென்று முன்பதிவு செய்ய வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்பதிவின்றி அனுமதிக்கப்பட்ட அளவைத்தாண்டி உடைமைகள் எடுத்துச் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.