Skip to main content

இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

கர்நாடகத்தில் காங்-மஜத கட்சிகளின் கூட்டணியின் ஆட்சி கவிழ்ந்தது. இதன்பின் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது. எடியூரப்பா மீண்டும் முதல்வராகினார். காங்-மஜத கூட்டணியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால், ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், இவர்கள் 15 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏ-க்கள் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.
 

mtb nagarajan

 

 

இந்த 15 பேர்களில் ஒருவரான எம்.டி.பி.நாகராஜ், ஒசக்கோட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன்பின் நாகராஜ், கடந்த 14ஆந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது பெயர் மற்றும் தன்னுடைய மனைவி சாந்தகுமாரி பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார். அதில், அவருக்கு ரூ.1,195 கோடி சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலின் போது தனக்கு ரூ.1,015 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதன்மூலம் கடந்த 18 மாதத்தில் எம்.டி.பி.நாகராஜின் சொத்து மதிப்பு ரூ.180 கோடி உயர்ந்துள்ளது.

எம்.டி.பி.நாகராஜ் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசில் மந்திரியாக பதவி வகித்தவர்.

 

 

சார்ந்த செய்திகள்