ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். அதன்படி ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 30- ஆம் தேதி தொடங்கி 5- கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 23- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்டமாக நவம்பர் 30- ஆம் தேதி தொடங்கும் தேர்தல், டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16, டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். இவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள் மட்டுமே தபால் வாக்கு அளித்து வந்த நிலையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து, ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.