Published on 01/11/2019 | Edited on 01/11/2019
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

நவம்பர் 30ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டம் நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் தேர்தல், டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16, டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.