Skip to main content

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்கும் ஜேஇஇ மெயின் தேர்வுகள்...

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

jee mains exam to start today

 

 

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று நாடு முழுவதும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் தொடங்குகின்றன. 

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

 

கல்வி நிலையங்களின் தொடர் முடக்கம், தேர்வு மையத்தின் பாதுகாப்பு குறித்த அம்சங்கள், தேர்வு நேரத்திலான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை குறித்துப் பல தரப்பினரும் கவலை தெரிவித்து வந்தனர். மத்திய அரசின் இந்த தேர்வு நடத்தும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள், பெற்றோர், மாணவர்கள் என பல்வேறு தரப்பிலும் கடுமையாக எதிர்ப்பு எழுந்த சூழலிலும் மத்திய அரசு தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக இருந்தது. இந்நிலையில், ஐஐடி, என்.ஐ.டி. உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவங்களின் சேர்வதற்கான ஜேஇஇ மெயின் தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்குகிறது. இந்த தேர்வினை சுமார் 8.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்