Skip to main content

மாநிலங்களவையில் 100-ஐ தொட்டது பா.ஜ.க.!

Published on 02/04/2022 | Edited on 02/04/2022

 

BJP hits 100 in states

 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 100-ஐத் தொட்டது. 

 

அசாம் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க.வைச் சேர்ந்த இரண்டு பேர் வெற்றி பெற்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுவார்கள் என கணிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர், பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால் , அக்கட்சி சார்பில் போட்டியிட்ட இரண்டு பேரும் வெற்றி பெற்றனர். 

 

இதைத் தவிர, நாகாலாந்து, இமாச்சலப்பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மாநிலங்களவைப் பதவியை வென்று இருப்பதன் மூலம் அந்த கட்சிக்கு தற்போது மாநிலங்களவையில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 2014- ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் படிப்படியாக அதிகரித்து, முதன்முறையாக 100-ஐ தொட்டுள்ளது. 

 

கடந்த 30 ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் பலம் 100- ஐ தொடவில்லை. இதன் தொடர்ச்சியாக, இரண்டு முறை பொதுத்தேர்தலில் வென்ற போதிலும், மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனாலும், பிஜு ஜனதா தளம், ஒய்ஆர்எஸ்காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. 

 

மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், இப்போதும் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லையென்றாலும், 30 ஆண்டுகளில் 100 உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்