Skip to main content

''அது பாம்பு அல்ல எனது கணவர்...'' மூதாட்டியால் பீதியில் உறைந்த கிராம மக்கள்!

Published on 07/06/2022 | Edited on 07/06/2022

 

 'It's not a snake, my husband ...' 'The villagers froze in panic at the grandmother!

 

வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை தனது கணவர் எனக் கூறி மூதாட்டி ஒருவர் அதனுடன் ஒரே அறையில் வாழ்ந்துவரும் சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.

 

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்ததில் உள்ள ராபகவி பனகட்டி தாலுகாவை சேர்ந்த குல்லஹல்லி எனும் கிராமத்தை சேர்ந்தவர் மானஷா. மூதாட்டியான மானஷாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை தனது கணவர் மறுஜென்மம் எடுத்து வந்துள்ளதாகச் சொல்லி மூதாட்டி அதற்கு பால் ஊற்றி வந்துள்ளார். பல நாட்களாக அதே வீட்டில் பாம்பு இருக்கும் நிலையில் இந்த தகவல் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்து பாம்பை அடிக்க சென்றுள்ளனர். ஆனால் மூதாட்டி மானஷா பாம்பு வடிவில் வந்துள்ள என் கணவரை அடிக்க வேண்டாம், வீட்டை விட்டு விரட்டவும் கூடாது என கேட்டுள்ளார். அதையும் மீறி சிலர் பாம்பை அடிக்க முயன்றபொழுது கண்ணீர் விட்டு அழுது தடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் மானஷா வீட்டிற்கு அருகில் உள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்