இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மொபைல் இணையதள சேவை முடக்கப்படும் என மணிப்பூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே குழந்தைகள் கடத்த சில வெளிமாநில நபர்கள் வருகிறார்கள் போன்ற போலி செய்திகளால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்ற சூழலில் போலிசெய்திகளால் இதுவரை 20 மேற்பட்டோர் பொதுமக்களால் தாக்கப்பட்டு இறந்துள்ளனர்.
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் போன்ற பல போலிசெய்திகளால் பரவும் வீடியோக்கள், புகைப்படங்களால் மணிப்பூர் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த மணிப்பூர் மாநில உள்துறை அமைச்சகத்தின் செயலர் ரகுமணி இன்று முதல் ஐந்து நாட்கள் மணிப்பூர் மாநிலத்தில் மொபைல் இன்டர்நெட் சேவை தடைசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.