Published on 19/06/2019 | Edited on 19/06/2019
நாட்டில் பல்வேறு துறைகளும் தனியார்மயம் ஆகி வரும் நிலையில் தற்போது ரயில்வே துறையையும் தனியார் மயமாக்க சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய ரயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார்களை வைத்து ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்தலைவர் வி.கே. யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஆரம்ப கட்டமாக சுற்றுலா மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவற்றுக்கு தலா ஒரு ரயில்களை தனியார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக குத்தகை முறைப்படி தனியாரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வருங்காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு முக்கிய சுற்றுலா தளங்கள் உள்ள வழித்தடங்கள் போன்றவை தனியார் வசம் ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.