Published on 28/08/2018 | Edited on 28/08/2018

"மாலத்தீவில் இந்தியக்குடிமகன்களை தவறாக நடத்தக்கூடாது. இது என்னுடைய நோக்கம், மாலத்தீவில் இருக்கின்ற இந்தியக் குடிமகன்களை பாதுகாக்க, இந்தியா மாலத்தீவின் மீது படையெடுக்க வேண்டும் என்பது. என்னுடைய கருத்திற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று சுப்பிரமணியன் சுவாமி மாலத்தீவின் மீது இந்தியா படையெடுக்க வேண்டும் என்று ட்வீட் செய்ததற்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் அவ்வாறு ட்வீட் செய்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ஆளும் பாஜக அரசு, சுப்பிரமணியன் சுவாமி கருத்துக்கும் எங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று நேற்றே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.