இந்திய பங்குச்சந்தைகள் இன்று (டிச. 10) காலை சரிவுடன் தொடங்கின. இன்று பகல் 1 மணி நிலவரப்படி, தேசிய பங்குச்சந்தையான நிப்டி 111.70 புள்ளிகள் சரிந்து, 13417.50 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 45755.44 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது. நேற்றைய வர்த்தக நேர முடிவுடன் ஒப்பிடுகையில் சென்செக்ஸ் இன்று 350.25 புள்ளிகள் சரிவு கண்டிருந்தது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
எனினும், நெஸ்ட்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பிரிட்டானியா, ஐடிசி, ஹிண்டால்கோ, அதானி போர்ட்ஸ், டைட்டான், மாருதி, ஏஷியன் பெயிண்ட், எஸ்பிஐ லைப் ஆகிய நிறுவனப் பங்குகள் லேசான ஏற்றம் கண்டன. ஒட்டுமொத்த அளவில் உலோகம், நுகர்பொருள் நிறுவனப் பங்குகள் மட்டுமே இந்த சரிவிலும் ஓரளவு தாக்கப்பிடித்து ஏற்றத்துடன் வர்த்தகம் ஆனது.
சரிவடைந்த பங்குகள்:
யுபிஎல், அல்ட்ராடெக், ஸ்ரீசிமெண்ட், டாடா மோட்டார்ஸ், இண்டஸ் இந்த், எம் அண்டு எம், ஐஓசி, ஹெச்டிஎப்சி வங்கி, கெயில், ஹெச்டிஎப்சி ஆகிய நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.யு.எஸ். மற்றும் ஐரோப்பிய, ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவே, இந்திய பங்குச்சந்தைகளின் சரிவுக்கும் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதன் தாக்கம் கமாடிட்டி சந்தையிலும் எதிரொலித்தது. தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் விலைகளும் பெரிய அளவில் சரிந்து இருந்தன.