![yogi aditynath](http://image.nakkheeran.in/cdn/farfuture/qHf9MmaswYKuHdq2326Y1uDxs4SXgZYBYOBmIT6pY04/1635751103/sites/default/files/inline-images/fr4e.jpg)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று (31.10.2021) சமூக பிரதிநிதி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், தலிபான்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்தால், அவர்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாடு இன்று சக்தி வாய்ந்ததாக உள்ளது. இந்தியாவை நோக்கி புருவத்தை உயர்த்த எந்த நாட்டிற்கும் துணிவில்லை. இன்று பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தலிபான்களால் கலக்கமடைந்துள்ளன. ஆனால் தாங்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்தால், வான்வெளி தாக்குதல் நடத்த இந்தியா தயாராக இருப்பது தலிபான்களுக்குத் தெரியும்" என கூறியுள்ளார்.
மேலும், சம்ஜவாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவற்றுக்கும் வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.