இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டு மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாகச் சீனா கூறி வருகிறது.
இந்தநிலையில் சீனாவில் நாளை நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ஒலிம்பிக் தீபம் ஏற்பட்டது. அதனை கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதலில் தலையில் காயமடைந்த சீன ராணுவத்தின் கமாண்டர் கி பேபவோ பயணித்தார்.
இந்தநிலையில் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி அளிக்கும் விதமாக, குளிர்கால ஒலிம்பிக்கை ராஜாங்க ரீதியிலாக புறக்கணிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "ஒலிம்பிக்கை அரசியலாக்க சீனா முடிவு செய்தது வருத்தம் அளிக்கிறது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவில் இந்திய தூதர் கலந்து கொள்ள மாட்டார்" எனத் தெரிவித்துள்ளது.