Skip to main content

இனி வாட்ஸப் மூலம் சிலிண்டர் பதிவு செய்யலாம்... இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு...

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

சமையல் எரிவாயு உருளையை இனி வாட்ஸப் மூலமே முன்பதிவு செய்துகொள்ளலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

indane gas cylinder bookings to be done by whatsapp also

 

 

வீடுகளுக்கு தேவையான சிலிண்டர்கள் இதுவரை தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், இனி வாட்ஸப் மூலமும் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம் என  இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (தமிழகம் மற்றும் புதுவை) நிர்வாக இயக்குநர் பி.ஜெயதேவன் கூறுகையில், "தமிழகத்தில் 2.38 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 1.36 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர்களை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறை தற்போது உள்ள சூழலில், இனி வாட்ஸப் மூலமும் இதனை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

சிலிண்டர் விநியோகஸ்தரிடம் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து 7588888824 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்பி வாட்ஸப் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும், விநியோகிக்கப்பட்ட சிலிண்டர் சரியான கட்டணத்தில், சரியான எடை மற்றும் சீல் ஆகியவற்றுடன் கிடைக்கப்பெற்றதா எனவும், விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை கிடைக்கப்பெறுகிறதா எனவும் வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்யலாம்" என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வணிக சிலிண்டர் விலை குறைப்பு!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Commercial cylinder price reduction

சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 30 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக ரூ. 36 அதிகரித்திருந்த நிலையில் இன்று (01.04.2024) ரூ.30.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் 1,960.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர், இன்று முதல் 1,930 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 818 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

முன்னதாக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் எனத் தெரிவித்த பிரதமர் மோடி சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின் குறிப்பாகப் பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'இது பிரதமர் தாய்மார்களுக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு' - தமிழிசை கருத்து

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
'This is the greatest gift the Prime Minister has given to mothers' - Tamil comments

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மேலும் 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாகவே சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், தேர்தல் காரணத்திற்காக விலை குறைக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

nn

இந்நிலையில், பிரதமரின் அறிவிப்பு குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், '''வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு உஜ்வாலா என்ற இலவச கேஸ் இணைப்பு திட்டத்தை கொடுக்கும் பொழுது பிரதமர் மோடி சொன்னார் 'எனது தாய் கரி அடுப்பில் ஊதி ஊதி சமைப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த புகையை தாய்மார்கள் உள்ளே இழுக்கும்போது ஏறக்குறைய 300 சிகரெட் புகைத்தால் நுரையீரலுக்கு எவ்வளவு கெடுதல் வருமோ அதே கெடுதல் இந்த புகை அடுப்பில் வருகிறது என்பதை கேள்விப்பட்டு தான் இந்த இலவச கேஸ் அடுப்பை கொடுக்கிறேன்' என்று சொன்னார். அதேபோல தான் இன்று விலை அதிகமாக இருப்பதால் பல குடும்பங்களுக்கு இது பிரச்சனையாக இருக்கிறது என்பதனால் ஒட்டு மொத்தமாக 100 ரூபாய் குறைந்திருப்பது என்பது உண்மையிலேயே மகளிர் தினத்தில் சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் பிரதமர் கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு என்று தான் நான் நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.