Published on 09/11/2018 | Edited on 09/11/2018

உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் நகரை பிரக்யாராஜ் என்றும், பைசாபாத் மாவட்டத்தை அயோத்தி என்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயர் மாற்றம் செய்தார். இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலுள்ள பழங்கால நகரமான அகமதாபாத் நகரை கர்னாவதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக குஜராத் துணை முதல்வர் கூறியுள்ளார்.
இதுபோன்று பாஜக செயல்பட்டு வரும் நிலையில், வருகின்ற தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. ஹைதரபாத் கோஷ்மால் தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏ ராஜா சிங் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் அந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத் நகரின் பெயரை பாக்யா நகர் என கண்டிப்பாக பெயர் மாற்றம் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.