Published on 08/05/2020 | Edited on 08/05/2020
கரோனா வைரஸ் மனித சமூகத்திற்கும் நவீன அறிவியலுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸூக்கான முறையான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாததால், இதை எதிர்கொள்வதில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்த நிலையில் நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் பரிசோதனை செய்யும் முயற்சிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் உடலில் உருவாகும் தொற்றினை அழிக்கும் எதிரணுக்களை, அவர்களது ரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்து, நோயாளிகளின் உடலில் செலுத்தி பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.