இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகின்றது. விடியற்காலை முதல் விரதமிருந்து மாலையில் இப்தார் என்னும் நோன்பு திறக்கப்படுகின்றது. நாளை ரமலான் பெருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மதநல்லிணக்க அடிப்படையில் வழக்கமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உட்பட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பிரெஞ்சு துணைத்தூதர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர்.
இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆளுநர் மாளிகை சார்பில் ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் அனைவரும் பங்கேற்று விருந்து உண்டனர்.