Skip to main content

மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை!

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழையால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



மும்பையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. விடாமல் பெய்து வரும் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் வணிக நகரங்களில் மழை பாதிப்புகள் இருந்த நிலையில், தற்போது நாவி மும்பை மற்றும் தானே பகுதிகளிலும் மழை பாதிப்புகள் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.

மும்பையின் முக்கிய வீதிகள் நீரில் மிதக்கின்றன. எல்லா வகையான போக்குவரத்துகளும் ஸ்தம்பித்துள்ளன. மும்பைவாசிகள் வீடுகளை விட்டு வெளியேவர வேண்டாம் என்றும், வெளியில் சிக்கியிருப்பவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியும் பட்னாவிஸைத் தொடர்புகொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

மழையளவு ஒரே நாளில் 30 செமீ-ஐத் தொட்டுள்ளது. மழை மேலும் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கலாம் எனவும் மும்பை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்