பப்ஜி விளையாட்டின் மூலமாக மாணவர்கள் சரியாக அவர்களின் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை, தேர்வுகளிலும் சரியாக கவனம் செலுத்துவதில்லை என பல் வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது.

முதல் முறையாக சில மாதங்களுக்குமுன் வேலூர் பல்கலை கழகத்தில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டது. அதன் பின் தற்போது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சூரத் மாவட்டத்தில் இந்த விளையாட்டை தடை செய்யப்போவதாக அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், குஜாராத் மாநிலம் சூரத் மாவட்ட நிர்வாகம் பப்ஜி விளையாட்டை தடை செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சூரத் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கையில், ‘பப்ஜி விளையாட்டு மார்ச் 9 முதல் தடை செய்யப்படவுள்ளது. பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கான சுற்றறிக்கை முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.