33 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் 18.12.18 அன்று நடந்த ரிபப்ளிக் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, 99 சதவீத பொருட்கள், அதாவது சாதாரண மக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் ஜிஎஸ்டி வரி விகிதமும் 18 சதவீதம் அல்லது அதற்கும் கீழ் கொண்டுவர அரசு விரும்புகிறது என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும், இனிமேல் ஆடம்பர பொருட்கள் மட்டும் 28 சதவீத ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சி கூட்டம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்தது. இதில் தமிழகம் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அதில், 7 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 28% இருந்து 18 % ஆக குறைத்துள்ளதாகவும், மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12% இருந்து 5% ஆக குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.