Skip to main content

ரூ-பே கார்டு, பீம் யுபிஐ மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

bhim

 

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம், இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்பிளே உற்பத்தியின் முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவுவதற்கான திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 6 ஆண்டுகளில் ரூ.76,000 கோடி செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூ-பே டெபிட் கார்டு, பீம் யுபிஐ மூலம் சிறிய பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டுக்கு சுமார் 1,300 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்