தெலுங்கானாவில் அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானதில், 6 குழந்தைகள் உட்பட 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஜெகதலா அருகே இன்று பகல் 11.45 மணி அளவில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 70 பேரில், 6 குழந்தைகள் உட்பட 40 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகள் குறித்து மேற்பார்வையிட்டார். இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தெலுங்கானா காபந்து முதல்வர் சந்திரசேகர் ராவ் ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறும்போது, அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிவந்ததும் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஜதராபாத்தில் இருந்து 190 கி.மீ தொலைவில் உள்ள குண்டகட்டா மலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பக்தர்களை ஏற்றி திரும்பி வரும் வழியிலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.