இந்தியாவில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைப்பெற உள்ளது. இதற்கான முதற்கட்ட வாக்கு பதிவு 20 மாநிலங்களில் சுமார் 91 மக்களவை தொகுதிகளில் வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் மக்கள் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் 100% வாக்கு பதிவை உறுதி செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிக்களை எடுத்து வருகிறது. இதில் ஒவ்வொரு மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் தேர்தலுக்கு வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் தனியார் தொழில் நிறுவனங்கள் , கல்வி நிறுவனங்களின் மாணவ , மாணவியர்கள் மற்றும் நடிகர் , நடிகைகள் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை இளம் வாக்காளர்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். அதே போல் தேர்தலில் வாக்களித்தால் உணவு மற்றும் பொருட்களில் சலுகைகள் என கடை வியாபாரிகள் ஒரு பக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் 100% வாக்கு பதிவு என்ற நிலை இந்த 17 வது மக்களவை தேர்தலில் நிச்சயம் எய்திட முடியும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்திய "இளம் வாக்காளர்களுக்கு" மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "கூகுள்" நிறுவனம் தனது டூடுளில் "ஒரு விரல் புரட்சி" (TODAY GOOGLE ICON IS SINGLE FINGER ) என்ற அடையாளத்தை இன்று வைத்து இந்திய இளம் வாக்களர்களை தேர்தலில் வாக்களிக்க ஊக்குவித்து வருகிறது.
இதனால் இன்றைய முதற்கட்ட மக்களவை தேர்தலில் 100% வாக்கு பதிவை எட்டி இந்திய நாடு ஒர் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதை உலக மக்களுக்கு இந்தியா காட்டும் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இன்றைய நாள் உலகில் வரலாற்று சிறப்புமிக்க நாளாக நிச்சயம் அமையும் என மக்கள் எதிர்நோக்கிக்காத்துக் கொண்டுள்ளனர்.
பி.சந்தோஷ் , சேலம் .