அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு சென்ற ட்ரம்ப், அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் அரங்கை பிரதமர் மோடியுடன் இணைந்து இருவரும் கூட்டாக திறந்து வைத்தனர். இன்று தில்லியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் பங்கேற்கிறார்.
இந்நிலையில் நேற்று ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை ட்ரம்பும் அவரது மனைவியும் ரசித்து பார்த்தார்கள். அப்போது அவரது பாதுகாப்புக்காக பயிற்சி பெற்ற ஐந்து லாங்கர் இன குரங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. ஆக்ராவில் குரங்குகள் தொல்லை அதிகம் இருப்பதால் அந்த குரங்குகளால் ட்ரம்புக்கு எந்த அச்சுறுத்தலும் வர கூடாது என்பதற்காக பயிற்சி பெற்ற அந்த குரங்குகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.