கோடை விடுமுறைக்காக குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கும் ஒரு பயிற்சி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பள்ளி குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் ‘தக்சஷீலா காம்ப்ளக்ஸ்’ என்ற கட்டிடத்தின் 4 வது மாடியில் மாணவ-மாணவிகளுக்கான கோடை பயிற்சி மையம் நடத்தப்பட்டு வந்தது. நேற்று மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்து வந்த நிலையில் திடீரென தீ பிடித்துள்ளது. 3 மற்றும் 4 ஆம் மாடிகள் முழுவதும் தீ பிடித்து புகை சூழ்ந்தது. இதனையடுத்து அங்கிருந்த சில மாணவர்கள் ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்தனர். பலர் உள்ளேயே சிக்கினர்.
இந்த விபத்தில் உடல் கருகியும், கீழே குதித்தில் உடல் சிதறியும் 20 குழந்தைகள் பலியாகியுள்ளார். மேலும் 16 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாகவும், விபத்துக்கு காரணமானவர்கள் தப்பிக்க முடியாது என்றும் குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேல் கூறி உள்ளார்.