2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கையில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் மக்கள் மாஸ்க் போடாவிடில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.